Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் உடலை மும்பை எடுத்து வர உதவியது யார் தெரியுமா?

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (18:17 IST)
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரின்  உடலை இந்தியா கொண்டு வர அவரின் கணவர் போனி சிரமப்பட்டுள்ளார். 
இந்நிலையில் சுற்றுலா விசாவில் அமீரகம் செல்பவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன.  அமீரக குடியுரிமை உள்ள ஒருவர் உறுதியளித்து கையெழுத்து போட்டால் மட்டுமே உடலை இறந்தவரின் நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று  கூறப்பட்டது. இதனால் கேரளாவை சேர்ந்த அஷ்ரப் தாமரசெரி(44) போனி கபூருக்கு உதவ முன்வந்துள்ளார். ஸ்ரீதேவியின் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள்  அனைத்திலும் போனி கபூர் அல்ல அஷ்ரபின் பெயர் தான் உள்ளது.
 
அஷ்ரப் தாமாக முன்வந்து உதவி அனைத்து விண்ணப்பங்களிலும் கையெழுத்திட்டு உறுதி அளித்ததால் தான் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல அமீக அதிகாரிகள் சம்மதித்தார்கள். நேற்று மட்டும் ஸ்ரீதேவியின் உடலோடு சேர்த்து 6 உடல்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உதவியுள்ளார் அஷ்ரப். நாடு விட்டு நாடு வந்து இறப்பவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதை சேவையாக செய்து வருகிறார் அஷ்ரப்.
அஷ்ரப் இதுவரை 4 ஆயிரத்து 700 உடல்களை 38 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்