Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரிதானா? - பொங்கும் நெட்டிசன்கள்

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரிதானா? - பொங்கும் நெட்டிசன்கள்
, புதன், 28 பிப்ரவரி 2018 (17:38 IST)
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட விவகாரம் சர்சையை கிளப்பியுள்ளது.

 
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  அதன் பின் அவரது உடல் அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாடு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
 
அங்கு, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகர், நடிகைகள் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின், மாலை 2 மணி அளவில் அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 5 கி.மீ தூரமுள்ள இடத்திற்கு சுமார் 2 மணி நேரம் நடந்த ஊர்வலம் 4.30 மணியளவில் முடிவடைந்தது.
 
ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை செலுத்த மஹாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளதால், ஸ்ரீதேவியின் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள்  முழங்கி அரசு மரியாதை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், ஒரு நடிகைக்கு, அதுவும் மது போதையில் மயங்கி நீரில் மூழ்கி மரணமடைந்த ஒரு நடிகைக்கு ஒரு மாநில அரசு 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதை கொடுப்பது சரியா? ஸ்ரீதேவி அப்படி என்ன நாட்டிற்கு நல்லது செய்து விட்டார்?. சம்பளம் வாங்கிக் கொண்டு சினிமாவில் நடித்தவருக்கு அரசு மரியாதை கொடுத்துள்ளது நியாயமா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
மேலும், ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் ஸ்ரீதேவி தொடர்பான செய்திகளையே ஒளிபரப்பிக் கொண்டிருந்ததால், கேரளாவில் பசிக்கொடுமையால் அரிசியை திருடிய காரணத்திற்காக அடித்துக்கொல்லப்பட்ட ஆதிவாசி இளைஞர் மதுவைப் பற்றிய செய்தி மறைந்து போனது எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச போட்டியில் பங்குபெற மாணவருக்கு உதவிய எம்.எல்.ஏ - வீடியோ