Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் விஜய், அமலா பால் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (10:56 IST)
இயக்குனர் விஜய், நடிகை அமலாபால், இடையே விவாகரத்து கோரிய மனு மீதான தீர்ப்பு வரும், 21ம் தேதிக்கு, சென்னை  குடும்ப நல நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.

 
இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும், 2014 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சினிமாவில் அமலாபால்  நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை, ஆதலால் இருவருக்கும் சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர். 
 
2016 ஆண்டு ஆகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல்  செய்தனர். தற்போது இவ்வழக்கு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
 
இருவரும் நேரில் ஆஜராகி, சுமுகமாக பிரிவதாக, மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு உத்தரவை,  பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்கு, நீதிபதி பூங்குழலி தள்ளிவைத்தார். இதனையடுத்து இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் தம்பதியினர் தொடர்ந்த விவாகரத்து வழக்குக்கு இம்மாதம் 21ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி? ஆச்சரியமான தகவல்..!

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments