Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்தாலஜியில் இறங்கும் தியாகராஜன் குமாரராஜா! முக்கிய இயக்குனர்கள் ஒப்பந்தம்!

Advertiesment
ஆந்தாலஜியில் இறங்கும் தியாகராஜன் குமாரராஜா! முக்கிய இயக்குனர்கள் ஒப்பந்தம்!
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:08 IST)
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தலைமையில் புதிதாக ஒரு ஆந்தாலஜி திரைப்படம் உருவாக உள்ளது.

சமீபகாலமாக ஓடிடிகளின் வரவால் ஆந்தாலஜி என்ற வகை தமிழில் அதிகமாகி வருகிறது. புத்தம் புதிய காலை, குட்டி லவ் ஸ்டோரிஸ் மற்றும் நவரசா என அடுக்கடுககாக வெளியாகினாலும் எதுவும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு ஆந்தாலஜி படம் உருவாக உள்ளதாம். அதில் இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோர் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த கதைக்களம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடெக்டிவ் நேசமணி… வடிவேலு போஸடரை வைத்து விளையாடிய குறும்புக்காரர்!