Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனிதன் படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த சீனு ராமசாமி!

Webdunia
புதன், 27 மே 2020 (19:12 IST)
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்தது. வொய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கும் இப்படத்திற்கு  இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டப்பிங் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,  " மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார்,திரு,யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை. என கூறி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments