Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் நடக்கும் இயக்குனர் ராம் படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (15:49 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் நடக்க உள்ளதாம்.

இயக்குனர் ராம் பேரன்பு படத்துக்குப் பிறகு நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து தயாரிப்பாளர் மாநாடு படத்தின் ரிலீஸில் பிஸியாக இருந்ததால் இந்த படத்துக்கு ஒரு சிறு இடைவேளை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இப்போது மீண்டும் ராமேஸ்வரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடந்து ஒரு மாதம் நடக்கும் இந்த படப்பிடிப்போடு பெரும்பாலானக் காட்சிகள் படமாக்க பட்டு முடிக்க உள்ளதாம். ஜனவரி மாதத்துக்குள் மொத்த படமும் முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது படத்தின் முக்கியமான காட்சிகளை சென்னை பொன்னேரியில் உள்ள ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ரயில் அரங்கு அமைக்கப்பட்டு அதி படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் இயக்குனர் ராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments