Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் அயலான் டீசர்… பிறந்தநாள் பரிசு கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

விரைவில் அயலான் டீசர்… பிறந்தநாள் பரிசு கொடுக்கும் சிவகார்த்திகேயன்!
, திங்கள், 31 ஜனவரி 2022 (15:45 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 ஆம் தேதி அயலான் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் ரங்கஸ்தலம் கூட்டணி!