Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

Mahendran
திங்கள், 20 ஜனவரி 2025 (18:52 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிய 'ஏழு கடல் ஏழுமலை’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான ட்ரெய்லர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நிவின்பாலி மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதை ஒரு ஓடும் ரயிலில் ஆரம்பிக்கிறது, சூரி மற்றும் நிவின் பாலி சந்திப்பு, இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை, நிவின்பாலியிடம் இருக்கும் அபாரமான சக்தி, அப்பாவி சூரி அவரிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது ஆகிய காட்சிகள் சூப்பராக உள்ளது.

மேலும் இயக்குனர்  ராம் மேக்கிங் மிகவும் அபாரமாக உள்ளதாக இந்த ட்ரெய்லரை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா மிகவும் அற்புதமாக பின்னணி இசை அமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று இந்த டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் ராமின் முந்தைய படங்கள் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

வித்தியாசமான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ராஜமௌலி படத்தில் நடிக்க இவ்வளவு கோடி சம்பளமா?... புதிய ரெக்கார்ட் படைத்த பிரியங்கா சோப்ரா!

8 நாளில் இத்தனைக் கோடி வசூலா?... கலக்கும் குடும்பஸ்தன்!

இந்தியா திரும்பிய கமல்ஹாசன்… அமரன் படத்தின் நூறாவது நாள் விழாவில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments