Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இருக்கும் சாதியப் பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார்… மாமன்னன் படம் குறித்து பா ரஞ்சித்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (12:07 IST)
கடந்த வாரம் வெளியான மாமன்னன் திரைப்படம் பரவலாக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குனர் பா ரஞ்சித் படக்குழுவினரை பாராட்டி முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுக வில் நிலவும் சாதியப் பாகுபாட்டை களைவதற்கான வேலையை இந்த திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு Udhayanidhi Stalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற #மாரிசெல்வராஜ் #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments