Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வம் காட்டும் பா ரஞ்சித்… இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு!

Advertiesment
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வம் காட்டும் பா ரஞ்சித்…  இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு!
, புதன், 12 ஏப்ரல் 2023 (08:50 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்போது கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் கோலார் தங்கவயல் இந்தியக் குடியரசு கட்சி சார்பாக ராஜேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தங்கலான் ஷூட்டிங்கில் இருந்த இயக்குனர் பா ரஞ்சித்தை சந்தித்து ஆதரவு கேட்டார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள பா ரஞ்சித் “கோலார் தங்கவயல் தமிழர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் ஷூட்டிங் இன்னும் எத்தனை நாட்கள் நடக்க உள்ளது?.. லேட்டஸ்ட் அப்டேட்!