Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவுக்கு நன்றி சொன்ன மிஷ்கின்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:03 IST)
இயக்குனர் மிஷ்கின் தான் இயக்க இருக்கும் பிசாசு 2 படத்துக்கான தலைப்பை தந்தமைக்காக இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள ’பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் மிஷ்கினின் பிறந்தநாளின்போது ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே . இந்த படத்தின் முதல் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் வெளியானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது மிஷ்கின் அதன் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியாவை வைத்து இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்கான தலைப்பின் உரிமை இயக்குனர் பாலாவிடம் இருந்த நிலையில் மிஷ்கினுக்காக அதை இலவசமாக வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் மிஷ்கின். தன் டிவிட்டர் பக்கத்தில் ‘நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்குச் சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களைப் பதிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments