Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:31 IST)
தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என வரிசையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி. சமீபகாலமாக அவருக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன சூர்யா திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.

தற்போது விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும்  ரத்னம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் அவருக்கு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ஹரியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments