‘கோட்’ ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட்பிரபு.. விஜய் ரசிகர்கள் குஷி..!

Siva
வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:19 IST)
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்த போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரஷ்யாவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து கூறியதோடு ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்றும் தளபதி விஜய்க்கு ஒரு விசில் போடு என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் இந்த படம் வெளியாக இருப்பதை அடுத்து மிகப்பெரிய ஓபனிங் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'கோட்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை  அடுத்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments