Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பயோபிக்கில் நடிக்க ஆசையா? இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (11:10 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக் படத்துக்கான casting calla அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இரு பாலரும் தங்கள் சுயவிவரக் குறிப்பை ilaiyaraajabiopic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப சொல்லி அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments