Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி சினிமா பின்தங்கியுள்ளது… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைக் குறிப்பிட்டு அனுராக் காஷ்யப் விமர்சனம்!

vinoth
வெள்ளி, 8 மார்ச் 2024 (07:25 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமா மிகவும் பின்தங்கி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதில் “மஞ்சும்மள் பாய்ஸ் வெகுஜன சினிமாவுக்கான மிகச்சிறந்த உருவாக்கம்.  இந்தியாவில் வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை விட இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஐடியாக்களை இந்தி சினிமா ரீமேக் செய்ய மட்டும்தான் விரும்பும்.  பிப்ரவரி மாதத்தில் வெளியான 3 மலையாள சினிமாக்களின் அடுத்தடுத்த வெற்றியைப் பார்க்கும் போது இந்தி சினிமா எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பது தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

சென்னையில் நடக்கும் கேம்சேஞ்சர் பட விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ் & விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments