Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை படத்தைப் பார்த்த அமீர் என்ன சொன்னார் தெரியுமா?

விடுதலை படத்தைப் பார்த்த அமீர் என்ன சொன்னார் தெரியுமா?
, சனி, 11 மார்ச் 2023 (14:46 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் வெற்றிமாறன், தனது நண்பரான இயக்குனர் அமீருக்குக் காட்டியுள்ளாராம். படத்தைப் பார்த்து பிரமித்துப் போன அமீர், தன் நண்பர்களிடம் எல்லாம் “விடுதலை தமிழ் சினிமாவின் முக்கியமானப் படமாக இருக்கும்” எனக் கூறி வருகிறாராம்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசு கார் வாங்கிய DJ Black - பிரியங்கா, மகாபாவுக்கு வெயிட்டான ட்ரீட்!