இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன்.. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (12:29 IST)
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன் என தனவே சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நிவின் பாலி நடித்த நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்/  இந்த படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு பிரேமம் என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம்தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஆகியோர் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து அவியல் மற்றும் நயன்தாரா நடித்த கோல்டு ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கிப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ்  தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்வதாக உருகமாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
 
நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஏதேனும் வெப் தொடர்கள் இயக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments