Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்கவும் அழவும் தயாராகுங்கள்… வாழை குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்பாம் இன்று ரிலீஸாகிறது. இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே பார்த்த பிரபலங்கள் படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜையும் உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளனர்.

அந்த வரிசையில் மாரி செல்வராஜின் கர்ணன் பட கதாநாயகன் தனுஷ் இப்போது இணைந்துள்ளார். படம் பற்றி பேசியுள்ள அவர் “சிரிக்கவும், கைதட்டவும் அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கவைக்கும் ஒரு உலகத்துக்குள் செல்ல தயாராகுங்கள். உலகமுள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படபோகும் ஒரு படைப்பு ‘வாழை’. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments