Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தொடங்குகிறது தனுஷ் 50 படத்தின் பூஜை?

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (16:02 IST)
பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ், அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படம் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்ற தனுஷ், மொட்டையடித்துக் கொண்டார். அதே மொட்டைத் தலை கெட்டப்போடுதான் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் - த்ரிஷா குறித்து சுசித்ராவின் சர்ச்சை கருத்து.. பதிலடி கொடுத்த த்ரிஷா..!

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments