Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலா குறித்த தனுஷின் லேட்டஸ்ட் ட்வீட்!

Advertiesment
காலா குறித்த தனுஷின் லேட்டஸ்ட் ட்வீட்!
, சனி, 9 ஜூன் 2018 (18:48 IST)
‘காலா’ குறித்த தனுஷின் லேட்டஸ்ட் ட்வீட்டில், கர்நாடகத்தில் படம் வெளியாக உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 7ஆம் தேதி ரிலீஸான படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. என்னதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கருத்துகளைப் பேசினாலும், ரஜினி ரசிகர்களுக்கு வேண்டிய விஷயங்கள் படத்தில் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும், காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு எதிராகப் பேசியதால், கர்நாடகாவில் ‘காலா’வை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்வதாக இருந்த கன்னட விநியோகஸ்தரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. ஆனாலும், சகஜ நிலைக்குத் திரும்பி நேற்று முதல் படம் ரிலீஸாகியுள்ளது.
 
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், “போலீஸ் அதிகாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், கர்நாடக விநியோகஸ்தர்கள் மற்றும் எங்களுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் ‘காலா’வை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய வைத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமராங் படப்பிடிப்பு நிறைவடைந்தது