Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 9ல் கர்ணன் ரிலீஸ் உறுதி: தனுஷ் டுவீட்

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:20 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுவதால் கர்ணன் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவந்ததும் கர்ணன் படம் ரிலீஸ் உறுதி குறித்த தகவல் வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறின. ஆனால் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் ரிலீஸாகும் என பதிவு செய்துள்ளார். மேலும் கர்ணன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்
 
இந்த பதிவில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதி திட்டமிட்டபடி கர்ணன் ரிலீஸாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments