Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராக மூன்றாவது படம்… ஷூட்டிங்கை தொடங்கிய தனுஷ்!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (06:59 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இதையடுத்து தனுஷ் மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக அறிமுகமாக, தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தன்னுடைய 50 ஆவது படத்தின் ஷூட்டிங் முடிந்த சில தினங்களிலேயே இப்போது தனுஷ் இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments