Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலியில் முதலீடு செய்ய தயங்குகிறேன்: பிரதமர் முன் பேசிய எலான் மஸ்க்..!

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (12:53 IST)
இத்தாலியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்த நாட்டில் முதலீடு செய்ய தயங்குகிறேன் என இத்தாலி நாட்டு பிரதமர் முன் எலான் மஸ்க் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலியில் பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க், இதே நிலை நீடித்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இத்தாலி நாட்டில் முதலீடு செய்ய தயங்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மேலானி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க், பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீமைகள் மிகைப்படுத்தப்பட்டு வருவதாக கூறிய மஸ்க், வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும் அதே சமயம் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு பெட்ரோல் டீசல் இயற்கை வாயு பயன்பாட்டை குறைக்க சொல்ல கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் மட்டுமே காற்று மாசுபடுவதற்கான காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்துக்காக பழைய ரஜினி பட டைட்டிலைத் தேடும் படக்குழு!

ஜனநாயகன் படத்தில் இந்த வேடத்தில்தான் நடிக்கிறாரா விஜய்?.. இணையத்தில் பரவும் தகவல்!

தன்னால் பட்ட நஷ்டத்துக்காக லைகா நிறுவனத்துக்குக் கைகொடுக்கிறாரா ரஜினி?

நானியின் படத்தில் இணைந்த கார்த்தி… அடுத்த பாகத்தில் அவர்தான் ஹீரோவா?

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments