Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தெலுங்கு படத்தில் தனுஷ்… வெயிட்டாக கைமாறிய சம்பளம்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (15:17 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தெலுங்கு படத்துக்கு அவருக்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தனுஷ் ஏற்கனவே பல படங்களைக் கையில் வைத்திருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் கமிட்டாகக் காரணம் இந்த படத்துக்காக மொத்தமாக தனுஷுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதனால்தான் செல்வராகவன் படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை இந்த படத்துக்கு கொடுத்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments