Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

Mahendran
வெள்ளி, 28 ஜூன் 2024 (12:39 IST)
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 26 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் நான்கு கேரக்டர்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் தனுஷ் மூத்த சகோதரராக நடித்திருப்பதாகவும், இரண்டாவது சகோதரராக சந்திப் கிஷான் நடித்திருப்பதாகவும், மூன்றாவது சகோதரராக காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் நடித்ததாகவும் இந்த மூன்று சகோதரர்களுக்கு சகோதரி ஆக துஷாரா விஜயன் நடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அபர்ணா பால முரளி, வரலட்சுமி, அனிகா சுரேந்திரன், ஜெயராம், அறந்தாங்கி நிஷா, சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் , ஏஆர் ரகுமான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம்  உருவாகியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments