Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் பிறந்த நாளில் வெளியான ‘கர்ணன்’ பர்ஸ்ட்லுக்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (12:33 IST)
தனுஷின் பிறந்த நாளில் வெளியான ‘கர்ணன்’ பர்ஸ்ட்லுக்
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னரே இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளாகிய இன்று சற்று முன்னர் ’கர்ணன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் அட்டகாசமாக வெளிவந்துள்ளது. சூரியனை நோக்கி பாயும் ஒரு வாளை பலர் ஒன்று சேர்ந்து பிடித்து உள்ளது போல் இந்த டைட்டில் போஸ்டர் உள்ளது. மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் ”நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இன்று காலை தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ’ரகிட’ என்ற பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
’ஜகமே தந்திரம்’ படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் கர்ணன் படத்தின் டைட்டில் போஸ்டர் ஆகியவை தனுஷின் பிறந்தநாள் பரிசாக இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments