Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கு… நட்ராஜ் சர்ச்சை டிவீட்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (12:00 IST)
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்ராஜ் பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழி படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் ’தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????...’ என ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் சுஷாந்த் தற்கொலையை முன்னிட்டு நெப்போட்டிசம் பற்றி விவாதங்கள் எழுந்தன. இதில் கரன் ஜோஹர், மகேஷ் பட் மற்றும் சல்மான் கானின் சகோதரர்கள் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இதுகுறித்து தற்போது ஆஸ்கர் வென்ற ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் கூட தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நட்டியின் இந்த டிவீட் யாரைக் குறிக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments