Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்? நாளை அறிவிப்பு வர வாய்ப்பு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:13 IST)
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தனுஷின் மற்றொரு படமான ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’ஜகமே தந்திரம்’ படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு விற்பனை செய்து விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் நெட்பிளிக்ஸ் ஓடிடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டதை அடுத்து தனுஷ் உள்பட பலரும் இந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் .ஆனால் சற்று முன் வந்த தகவலின் படி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படம் வெளியாக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments