Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ’D50’ படத்தின் சூப்பர் அப்டேட்.. சன்பிக்சர்ஸ் அறிவிப்பு..!

Mahendran
சனி, 17 பிப்ரவரி 2024 (18:35 IST)
தனுஷின் 50வது திரைப்படத்தை அவரே நடித்து இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

’D50’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 19ஆம் தேதி வெளியிடப் போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் 19ஆம் தேதி காத்திருக்கின்றனர்

இந்த படத்திற்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அறிவிப்பு தான் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷ் காத்தவராயன் என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது

தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வடசென்னை பின்னணியாக கொண்ட கதையம்சம் என்று தெரிகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments