Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

vinoth
புதன், 27 நவம்பர் 2024 (12:13 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy tale’ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீஸாகியுள்ளது. அதில் தனுஷின் அனுமதியின்றி அவர் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பயன்படுத்தப் பட்டு இருந்தன.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார். இந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த ஆவணப்படத்தின் மீது ஒரு செயற்கையான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ஆவணப்படம் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் நானும் ரௌடிதான் படக் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

சின்னப் பையன் கூட முறைக்கிறான்… விஜய் குறித்த பேச்சுக்கு பதிலளித்த போஸ் வெங்கட்!

நான் நல்லா இருக்குன்னு சொன்னக் காட்சிகளை எல்லாம் வெற்றிமாறன் நீக்கிட்டார்… இளையராஜா ஜாலி பேச்சு!

நான் B.com மூனு வருஷம் படிச்சேன்… ஆனா வெற்றிமாறன் கிட்ட நாலு வருஷம் படிச்சிருக்கேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments