Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது...

Webdunia
வியாழன், 16 மே 2019 (18:08 IST)
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரவுதேவா, தமன்னா நடித்து 2016ல் வெற்றிகரமாக ஓடிய பேய்படம் ‘தேவி’. அதன் இரண்டாம் பாகமான ‘தேவி - 2’ படத்திற்கான ஷூட்டிங் மற்றும் தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில், அதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் நடித்த பிரவுதேவா, தமன்னா ஜோடியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். கூடவே ஆர்ஜே பாலாஜி, நந்திதா, கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்துவிடும். அந்த பேயின் ஆசையை நிறைவேற்றி தன் மனைவியை காப்பாற்றுவார் பிரபுதேவா. ‘தேவி - 2’ ல் முற்றிலும் எதிராக பிரபுதேவாவுக்கு பேய் பிடித்து விடுவது போலவும், அதன் நோக்கத்தை நிறைவேற்றி கணவரை காப்பாற்றுகிறார் தமன்னா என்று ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பகிர்ந்து வருகின்றனர். ’கஞ்சனா - 3’ என்ற பேய் படம் மூலம் தொடங்கிய இந்த கோடை விடுமுறையை மே 31ல் வெளியாகும் ‘தேவி-2’ என்கிற மற்றுமொரு பேய் படம்  ரசிகர்களுக்குத் திகில் எனும் தீனி போடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
பேய் படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனி பிரியம்தான். ராகவா லாரன்ஸை தொடர்ந்து பிரபுதேவாவும் பேய் பட தொடர் வரிசையை தொடங்கி வைத்திருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments