Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை

Advertiesment
விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை
, வியாழன், 16 மே 2019 (15:48 IST)
விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக 'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார்.

விளையாட்டை  மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை  தளபதி 63 என்றே அழைத்து வருகின்றனர்.
 
பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார்.  மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார்.
webdunia
கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா.
 
தற்போது சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சயீரா நரசிம்ம ரெட்டி பட நடிகர் மயங்கி விழுந்து உயிர் இழப்பு