Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரோடுதான் படம் செய்யப் போகிறார் தேசிங் பெரியசாமி… குழப்பும் வதந்திகள்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:11 IST)
துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது தேசிங் பெரியசாமிதான் என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே போல விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவல் இதை எல்லாவற்றையும் மறுத்து தேசிங், அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனைதான் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இதில் எதில் உண்மை என்பது அவரே அறிவித்தால்தான் உண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments