Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள 1,400 கி.மீ., பயணம் செய்யும் மகள் !

Advertiesment
ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள 1,400 கி.மீ.,  பயணம் செய்யும் மகள் !
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (20:19 IST)
பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ரிஷி கபூர் காலமானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் தான் உடைந்து போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  ரிஷிகபூருக்கு இரங்கல் பதிவிட்டிருந்தார்.

ரிஷி கபூருக்கு மனைவி மகன் ( ஹிந்தி நடிகர் ) ரன்வீர் கபூர்,மகள் ரித்திமா கபூர் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ரிஷிகபூரின் மகள் சாலைவழியே டெல்லியில் இருந்து மும்பைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக  டெல்லியில் இருந்து சாலையில் கார் மூலம் மும்பைக்கு செல்லவுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசிடம் அவர் அனுமதி கோரியதாகத் தெரிகிறது.

டெல்லியில் இருந்து மும்பைக்கு சுமார் 1400 கி.,மீட்டர் தூரம் என்பதால்  அவர் `18 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லீக்கானது வலிமை பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரசிகரின் கைவண்ணத்தில் உருவானதா?