Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகநாயகனைக் காய்ச்சியெடுத்த முன்னாள் நடிகர் சங்க செயலாளர்

Advertiesment
உலகநாயகனைக் காய்ச்சியெடுத்த முன்னாள் நடிகர் சங்க செயலாளர்
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (19:10 IST)
விஷாலுக்கு ஆதரவு கொடுத்து தேர்தலில் நிற்க வலியுறுத்தியதே உலக நாயகன் தானாம். அதனால் ‘டத்தோ’ நடிகர் உலக நாயகனை வறுத்தெடுத்துள்ளார்.


 

 
அடுத்தடுத்து தளபதியை வைத்து இயக்கிவரும் அந்த இளம் இயக்குநர் தயாரித்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளரான ‘டத்தோ’ நடிகர், ‘இந்த தியேட்டர் ஓனருக்கு நன்றி சொல்லியே ஆகணும். ஏன்னா, அவர்தான் நடிகர் சங்கம் இரண்டாகப் பிரிய காரணம்’ என்று பேசினார். அத்துடன், ‘நானெல்லாம் மேடையிலேயே பளிச்சென பேசுறவன். மத்தவங்க மாதிரி ட்விட்டர்ல பேசுறவன் இல்ல’ என்றார்.
 
உலக நாயகன் ட்விட்டரில் சொல்லும் கருத்துகள் தான் சமீப காலமாகப் பிரபலம். விழாவுக்கு வந்திருந்த அவரைத்தான் அந்த நடிகர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அனைவரும் புரிந்து கொண்டனர். காரணம், விஷாலுக்கு ஆதரவு கொடுத்து தேர்தலில் நிற்க வலியுறுத்தியதே உலக நாயகன் தானாம். அதனால் தான், அவரைக் காய்ச்சியெடுத்தார் ‘டத்தோ’ நடிகர் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழற்றிவிட்ட நடிகை ; போதைக்கு அடிமையான ஹீரோ