Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் யாரும் இங்கு வரக்கூடாது! வார்னிங் விடுத்த தர்பார் படக்குழு!

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:17 IST)
ரஜினியின் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களும் புகைப்படங்களும் லீக்கானதால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது படுமும்முரமாக நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும்  ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் , விடீயோக்கள் சமூகவலைத்தளங்களில் லீக்கானது. சமீபத்தில் கூட ரஜினி , யோகி பாபு , நிவேதா தாமஸ் இடப்பெற்றிருந்த ஷூட்டிங் வீடியோ ஒன்று  லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


 
இந்த நிலையில், இதற்கு முட்டுக்கட்டு போடும் வகையில் தற்போது தர்பார் படக்குழுவினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தி பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். மேலும், காவல் நிலையத்தில் மனு அளித்து அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பை கேட்டதுடன்,  படத்தில் நடிக்கும் துணை நடிகர் , நடிகைகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து எச்சரித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக சினிமா ரசிகர்களின் காத்திருப்பு ஓவர்… நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ஸ்க்விட் கேம்ஸ் 2’!

சல்மான் கான் கேமியோ இருந்தும் இந்தியில் எடுபடாத ‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’!

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments