Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா மிதுன் மீதான பண மோசடி வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:56 IST)
தமிழ் சினிமாவில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அதன்பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மீராமிதுன் தலைமறைவானார்.

அதை தொடர்ந்து மீராமிதுனை போலீஸார் சேத்துப்பட்டு மற்றும் வேளச்சேரியில் தேடினர். அங்கு கிடைக்காத நிலையில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கும் தேடியுள்ளனர். ஆனால் அங்கும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைது வாரண்ட் பிறப்பித்து 2 மாதங்களாகிவிட்ட நிலையிலும் காவல்துறை சரியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து மீரா மிதுனை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மீரா மிதுன் ‘மிஸ் சென்னை’ விருது பெற்ற போது, ஒரு தனியார் நிறுவனத்தின் ப்ரமோஷனுக்காக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மீரா மிதுன் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் “மீரா மிதுன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யமுடியாது” என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments