Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜமீனை இழிவாக காட்டியதாக வழக்கு; விசாரணைக்கு பின் இயக்குனர் பாலா விடுவிப்பு!

Advertiesment
ஜமீனை இழிவாக காட்டியதாக வழக்கு; விசாரணைக்கு பின் இயக்குனர் பாலா விடுவிப்பு!
, வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:53 IST)
பாலா இயக்கி சில ஆண்டுகள் முன்னதாக வெளியான அவன் இவன் படம் குறித்த வழக்கிலிருந்து பாலா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்து 2011ல் வெளியான திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் ஜமீன்தார் வகை வாரிசாக ஹைனஸ் என்னும் ஜமீன்தார் தீர்த்தபதி கதாப்பாத்திரத்தில் ஜி.எம்.குமார் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனையும், சொரிமுத்து ஐயனாரையும் இழிவாக சித்தரித்து காட்டியுள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடரப்பட்டது. இதன்மீதான விசாரணை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இயக்குனர் பாலா நேரில் ஆஜரானார். இந்த விசாரனையில் மனுதாரர் தகுந்த ஆதாரங்களை வழங்காத காரணத்தால் வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு...? ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய மடோனா செபாஸ்டியன்!