Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, பிக்பாஸ் போட்டியாளரா?

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:58 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல திரும்பத் திரும்ப பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் கனி, ஏற்கனவே யூடியூபில் பொன்னியின் செல்வன் கதை சொல்வதில் வல்லவர் என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளப் போவதாக பல இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து அவர் ரசிகர்களிடம் யூடியூபில் நேரடியாக பேசியபோது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் ஆனது என்றும் அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்றும் இதுவரை பிக்பாஸ் குழுவினர் தன்னை அணுகவில்லை என்றும் அவர் கூறி உள்ளார். எனவே கனி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது வதந்தி என்பது உறுதியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

நான் இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

மாதவன் நடிக்கும் வெப் சீரிஸை தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

விஷால் ஏன் இப்படி இருக்கிறார்?... நெருங்கிய நண்பரான விச்சு விஸ்வ்நாத் அளித்த பதில்!

மேலும் 20 நிமிடத்தைச் சேர்த்த புஷ்பா 2 படக்குழு…!

அடுத்த கட்டுரையில்
Show comments