Publish Date: Thu, 10 Jun 2021 (16:25 IST)
Updated Date: Thu, 10 Jun 2021 (16:28 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரும் பிரபலமானவர் பாபா பாஸ்கர். இவர் திரைப்படங்களுக்கு நடன பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைத்துள்ளது. அத்துடன் தெலுங்கில் ஆங்கராகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது மகளுக்கு சடங்கு செய்து அழகு பார்த்த வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு என் செல்ல குட்டி என எமோஷனல் கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.