Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ வேண்டாம்: யோகிபாபு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (21:20 IST)
காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர்கள் பெரிய அளவில் கோலிவுட்டில் வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் தொடர்ந்து காமெடி நடிகர்களுக்கு அவ்வப்போது ஹீரோ ஆசை வந்து கொண்டுதான் உள்ளது. கோலிவுட்டில் ஒரு காலத்தில் சந்தானம் காமெடியனாக இருந்தபோது அவர் நடிக்காத படமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அவர் ஹீரோவான பின்னர் கிட்டத்தட்ட சந்தானத்தை ரசிகர்கள் மறந்தேவிட்டார்கள். 
 
இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. நயன்தாராவே அவருடைய நடிப்பை ரசித்து அவரை தன்னுடைய படங்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
 
இந்த நிலையில் ஒருசில இயக்குனர்கள் யோகிபாபுவிடம் சென்று ஹீரோவுக்கான கதையை கூறியுள்ளனர். ஆனால் தெளிவாக இருக்கும் யோகிபாபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோ கேரக்டர் வேண்டாம், நான் கடைசி வரை காமெடியன் தான் என்று கூறி ஹீரோவுக்கான கதை சொல்ல வந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டாராம். சரியான முடிவை எடுத்துள்ள யோகிபாபு இன்னும் பல  வருடங்கள் கோலிவுட்டில் காமெடியனாக கொடிகட்டி பறப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments