Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே கெத்து காட்டவிருக்கும் விக்ரமின் ‘கோப்ரா’

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (20:23 IST)
சியான் விக்ரம் நடித்துவரும் ‘கோப்ரா’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 21 ஆம் தேதியான இன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி இன்று வெளிவராததால் விக்ரம் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது விக்ரம் ‘கோப்ரா’ படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் அந்த 10 கேரக்டர்களின் கெட்டப்புகளையும் ஒரே பர்ஸ்ட்லுக்கில் வெளியிட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கேரக்டரின் போட்டோஷூட் ஒவ்வொரு நாள் நடைபெறுவதால் இந்த பர்ஸ்ட் லுக் வெளியிட கால தாமதமாகி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் கண்டிப்பாக இந்த பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறியுள்ளனர்
 
மொத்தத்தில் பஸ்ட் லுக் போஸ்டரிலேயே ரசிகர்களை மிரட்ட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதனையடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது படுகிறது 
 
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments