Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

Siva
ஞாயிறு, 23 மார்ச் 2025 (15:32 IST)
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
 
"அனைவருக்கும் வணக்கம்!
 
நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம்  அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம், மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேர் உயிரை  பறிகொடுத்தனர்.
 
இந்த கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
 
இதுதொடர்பாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, 100 சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள்.
 
 அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது, அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள்.
 
நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த்."
 
இவ்வாறு ரஜினிகாந்த் அந்த  வீடியோவில் குறிப்பிட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments