நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாரூக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதில் பாலிவுட் நடிகை திஷா பதானி கவர்ச்சிகரமான டான்ஸ் ஒன்றையும் ஆடினார். ஆனால் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது இந்த டான்ஸ் வீடியோவை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒளிபரப்பில் கட் செய்துவிட்டு கமெண்டரி வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலரும் கிண்டலாக சமூக வலைதளங்களில் இட்டு வரும் பதிவுகள் வைரலாகத் தொடங்கியுள்ளதுடன், திஷா பதானி என்ற ஹேஷ்டேகும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K