Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த திரை எழுத்தாளர் ஆரூர் தாஸ் மரணம்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (16:15 IST)
தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் இருந்த 50 கள் முதல் 70 கள் வரை பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ். எம் ஜி ஆர், சிவாஜி முதல் கொண்டு அக்காலத்தைய முன்னணி கலைஞர்கள் பலரது படங்களுக்கும் இவர் கதை வசனம் எழுதியுள்ளார்.

1955 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நேரடி தமிழ்ப் படங்கள் மற்றும் டப்பிங் படங்கள் என 1000 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பங்காற்றியுள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்.

இந்நிலையில் வயது மூப்புக் காரணமாக அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடல் தி நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காலையிலேயே அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்த நிலையில், இப்போது நேராக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கேஷ்வல் உடையில் பூனம் பாஜ்வாவின் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

காதலரைக் கரம்பிடித்த ரம்யா பாண்டியன்… குவியும் வாழ்த்துகள்!

டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் ‘BP 180’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments