Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் அதுவுமா இப்படியா! ராய்லட்சுமியின் வீடியோவால் எத்தனை பேர் பயந்துட்டாங்க!

Webdunia
திங்கள், 6 மே 2019 (11:34 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.


 
அந்தவகையில் தற்போது  எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா  படத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார். திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று ராய்லட்சுமி பிறந்தநாளையொட்டி வெளியிட்டனர்.  படக்குழுவினர். இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும்  பெற்றுள்ளது. 
 
இந்த வீடியோவில் ஒரு அறையின் சுவரில் நிறைய புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சின்ட்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இருக்கிறது. பின்னணியில் ஒலிக்கும் குரலில், 'இந்த சின்ட்ரெல்லா புகைப்படம் பல கோடி விலை போகும்' எனும் உரையாடல் கேட்கிறது.
 
அந்தநேரத்தில் திடீரென கேமரா அதிவேகமாக நகர்ந்து, சின்ட்ரெல்லா போட்டோவுக்கு அருகில் செல்ல, அதில் இருந்து ஒரு பேய் வெளியே வந்து நம்மை பயமுறுத்துகிறது. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு நொடி பயந்துபோவது நிச்சயம்.
 
பிறகு பழையபடி அந்த பேய் அழகிய சின்ட்ரெல்லாவாக மாறிவிடுகிறது. இந்த புரோமோ வீடியோ பார்த்தவர்கள், பயந்து போய் பிறந்தநாளும், அதுவுமா இப்படி பண்ணுவீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments