Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய்தான் காரணம்! – போலீஸ் பகீர் தகவல்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:26 IST)
தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் மற்றும் தாய் அளித்த மன அழுத்தமே காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக நசரத் பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயா அவரை அவரது கணவருடந்தான் வாழ வேண்டும் என வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

கணவர் மற்றும் தாய் ஏற்படுத்திய மன உளைச்சலாம் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் சித்ராவின் மொபைலில் இருந்த கால் ரெக்கார்டுகள், வாட்ஸப் தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments