இந்தியாவில் எந்த நடிகருக்கும் தனுஷின் துணிச்சல் இல்லை- சிரஞ்சீவி புகழாரம்!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (15:15 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்தியாவில் இந்த படம் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சிரஞ்சீவி “இந்த படத்தில் தனுஷ் நடித்த தேவா கதாபாத்திரத்தில் நடிக்க எந்தவொரு இந்திய நடிகருக்கும் துணிச்சல் இருக்காது. ஏன் எனக்கேக் கூட இல்லை. அதனால் இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் விருதுக்கே அர்த்தம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநரின் அடுத்த படைப்பு: 'பாலன்' படப்பிடிப்பு நிறைவு!

அழைப்பிதழ் வைக்கும் போது விஜய் சொன்ன விஷயம்! டி.சிவா பெருமிதம்

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments