Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்பனை!

Advertiesment
11 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்பனை!
, திங்கள், 24 மே 2021 (11:52 IST)
சென்னையில் 11 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு குறைந்த விலையாக 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் வாங்கி குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அரசு சார்பாகவே சென்னை முழுவதும் மண்டலம் வாரியாக காய்கறிகள் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் சார்பில் கொள்முதல் செய்து காய்கறி வழங்குவதால் குறைந்த விலையில் 11 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களின் பீதி ஓரளவுக்கு குறைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன Pose இது? வழுக்கி விழுந்திட்டு எழுந்துக்க முடியாத மாதிரி - கலாய் வாங்கும் ராய் லட்சுமி!