Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு: திரையுலகினர் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (11:34 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தவும் திரையரங்குகள் திறக்கவும் மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு நடத்தவும், அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்
 
இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்
 
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நாடு முழுவதும் நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் குறைந்த பட்ச ஊழியர்களுடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் எச்சில் துப்பக்கூடாது என்றும் கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து நாளை முதல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

நானும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைந்து நடித்தால்… சூரி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments